ARTICLE AD BOX
Ajith: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கிறது குட் பேட் அக்லி படம். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்துடன் இணைந்து இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித்தின் தீவிர ரசிகர் தான் ஆதிக். அதை நிரூபிக்கும் வகையில் அஜித்தின் ஃபேன் பாயாக குட் பேட் அக்லி படத்தை செதுக்கி இருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லரில் அஜித் நடித்த முந்தைய படங்களின் கதாபாத்திரத்தின் சாயல்களை வெளிக்கொண்டு வந்திருந்தார். அதன்படி தீனா, அமர்க்களம், வாலி, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் ரெஃபரன்ஸ் இப்படத்தில் காண்பிக்கப்பட்டது.
அஜித்தின் முந்தைய படங்களின் சாயலை காட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்
good-bad-ugly அஜித்தின் லுக் பட்டையை கிளப்புகிறது. இப்போது ரெட் டெவிலாக வந்து துவம்சம் செய்யப் போகிறார் என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. அவ்வாறு படம் முழுக்க பில்டப் மற்றும் பஞ்ச் டயலாக்கால் நிறைந்து இருக்கிறது.
விடாமுயற்சி படம் தான் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. கண்டிப்பாக மாஸ் சம்பவத்திற்கு காத்திருக்கிறது. மேலும் சரியான வில்லனாக அர்ஜுன் தாஸ் இந்த ட்ரெய்லரில் மிரட்டி விட்டுள்ளார்.
எதிர்பார்க்காத பல கதாபாத்திரங்களும் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆகையால் மார்ச் 10ஆம் தேதி அஜித்தின் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து காத்திருக்கிறது. இப்போதே டிக்கெட் புக்கிங் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

8 months ago
8






English (US) ·