ARTICLE AD BOX
`சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பாவனா அடுத்தடுத்து `வெயில்', `ஜெயம் கொண்டான்', `தீபாவளி' போன்ற படங்களில் நடித்து நம் மனதுக்கு பேவரைட்டானார். கடைசியாக அஜித்துடன் `அசல்' படத்தில் நடித்திருந்தவர் தற்போது 15 வருட இடைவெளிக்குப் பிறகு `தி டோர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கவிருக்கிறார்.
The Door movieஇப்படத்திற்காக அவரை சந்தித்துப் பேசி அவருடைய கரியரின் சில முக்கியமான பக்கங்களையும் புரட்டினோம்.
பேசத் தொடங்கிய நடிகை பாவனா, `` நான் தமிழ்ல `சித்திரம் பேசுதடி' படத்தின் மூலமாகதான் அறிமுகமானேன். இந்தப் படம் எனக்கு தமிழ்ல கிடைச்ச முதல் வாய்ப்பு இல்ல. அதுக்கு முன்னாடி தமிழ்ல இருந்து கதைகள் வந்தது. என்னுடைய தந்தை அப்போ சினிமா துறையிலதான் இருந்தாரு. அவருக்கு சினிமாவுல இருக்கிற விஷயங்களைப் பற்றி தெரியும். அதே சமயம், தமிழ் சினிமாவுல இருந்து எங்களுக்கு அப்போ யாரையும் தெரியாது. இது கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது. மிஷ்கின் சார் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துட்டு கதை சொல்றதுக்காக அப்போ திருவனந்தபுரம் வந்தாரு. `இந்தக் கதையை கேளுங்க. அப்புறம் உங்க பதிலை சொல்லுங்க'னு சொன்னாங்க. நானும் அப்போ அந்தக் கதையைக் கேட்டேன்.
Actress Bhavana Interviewஎனக்கு ரொம்பவே அந்தக் கதை பிடிச்சிருந்தது. அந்த கேரக்டர்ல நடித்தால் நல்லா இருக்கும்னு தோனுச்சு. அப்பா முதல்ல வேண்டாம்னுதான் சொன்னாங்க. அதன் பிறகு `கதை நல்லாயிருக்கு, கேரக்டர் பிடிச்சிருக்கு'னு அவர்கிட்ட சொன்னேன். அப்படிதான் நான் தமிழ் சினிமாவுல என்னுடைய முதல் படத்துல நடிச்சேன். மிஷ்கின் சார் அப்போ என்னுடைய புகைப்படத்தை எதோ மலையாள பத்திரிகையின் அட்டைப்படத்துல பார்த்திருக்கார்.
Insidious: The Red Door Movie Review | Vikatan Review | Patrick Wilson | Ty Simpkinsஅப்புறம் `சித்திரம் பேசுதடி' கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க." என 'சித்திரம் பேசுதடி' திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார்.
இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், `` நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்னு பலரோட வேலை பார்த்திருக்கேன்.
Actress Bhavana Interviewஇப்போ `ரேகாசித்திரம்' படத்துல கமல் சாரை பார்க்கும்போது எனக்குமே சப்ரைஸிங்காக இருந்தது. இவங்ககூட உதவி இயக்குநர்களாக பணியாற்றியவங்க இன்னைக்கு மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக இருக்காங்க. முக்கியமாக, இந்த சீனியர் இயக்குநர்களோட அனுபவத்துல இருந்து நம்ம சில விஷயங்கள் கத்துக்கலாம்.
ஒரு ப்ளான் இல்லைனா, இன்னொரு ப்ளான் அவங்ககிட்ட ரெடியாக இருக்கும்." என்ற அவர், `` மம்மூக்கா, லாலேட்டன்னு ரெண்டு பேரும் லெஜெண்ட்.
Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். ரெண்டு பேரும் பன்சுவலாக இருப்பாங்க. கேமிராவுக்கு எப்படி இடம் கொடுத்து பேசணும்ங்கிறதை ரொம்பவே இயல்பாக பண்ணுவாங்க. அவங்ககூட நடிக்கிறது ஸ்கூல் மாதிரிதான்." என்றவரிடம் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஏன் நடிக்கவில்லை எனக் கேட்டோம். அதற்கு, `` எனக்கு அது அன் - கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்.
Actress Bhavana Interviewஅந்தக் கதாபாத்திரங்கள் நான் ரிலேட் பண்ணிக்க முடியாமல் இருந்திருக்கலாம். அப்போ அது க்ளாமர் ஆதிக்கம் செலுத்தின சினிமா துறையாக இருந்தது. கம்போர்ட் இல்லைனா பண்ணக்கூடாதுனுதான் தெலுங்கு சினிமாவுல அதுக்கப்புறம் படங்கள் பண்ணல." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

9 months ago
8






English (US) ·