ARTICLE AD BOX
Arasan- தமிழ் திரையுலகில் சில பெயர்கள் வரும்போது ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் அதிகரிக்கும். அந்த பெயர்களில் முதலில் வருவது சிலம்பரசன் டி.ஆர், அதாவது நம்ம STR. அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு மாறுபாடு, ஒரு வலிமை இருக்கும். இப்போ அரசன் படத்தில் STR மீண்டும் ஒரு புதிய கோணத்துடன், வடசென்னையின் பின்புலத்தில் நடக்கும் ஒரு கதையில் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சிம்பு “மயிலை சிவகுமார்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெயரே local flavour கொண்டது. வடசென்னையின் மயிலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன். தெருக்களில், கூலித்தொழில்களில், அரசியலில், நண்பர்களுக்காக உயிரை வைக்கக் கூடிய ஒருவன். ஆனால் அவனுடைய மனசு வெறும் ரவுடி மனசு இல்ல; அவன் ஒரு தத்துவம் கொண்ட மனிதன். அவன் அனுபவங்கள்தான் அவனை ஒரு அரசனாக மாற்றுகிறது. மயிலை சிவகுமார் எதிர்கொள்ளும் அரசியல், நட்பு, துரோகம், அதிகாரம் எல்லாமே அவன் வாழ்க்கையின் அடுக்கடுக்கான பக்கங்கள்.
arasan movie stillSTR இதற்கான சரியான முகம் என்பதில் வெற்றிமாறன்-க்கு எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கதை வடசென்னையின் மயிலை, தண்டையார்பேட்டை, பாரீஸ் கார்னர், ராயப்பேட்டை போன்ற பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அந்த மண்ணின் வாசனையையும் மொழியையும் காட்டுவதே இவரது நோக்கம்.
சிம்பு இந்த கதாபாத்திரத்திற்காக உடல் மாற்றம் செய்திருக்கிறார். சிறிது குண்டாகி, முடி மற்றும் தாடி வளர்த்து, வடசென்னை slang கற்றுக்கொண்டு, ஒரு local gangster போல தோற்றமளிக்கிறார். கடந்த சில வருடங்களில் “Maanaadu”, “Vendhu Thanindhathu Kaadu”, “Pathu Thala” போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் STR சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் “அரசன்” அவருக்கே ஒரு புதிய பரிமாணமாக இருக்கப் போகிறது. இது வெறும் மாஸ் ரோல் அல்ல, ரொம்ப raw-ஆன கதாபாத்திரம்.
mayilai sivakumarசிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார்: “இந்த கதாபாத்திரம் ரவுடி கதை இல்ல, இது ஒரு மனிதனின் போராட்டம்.” அந்த ஒரு வரியிலேயே இந்தப் படத்தின் ஆன்மா அடங்கியுள்ளது.
அரசன் ப்ரோமோ வீடியோவில், அவர் கண்களில் ஒரு துயரம், ஒரு கோபம், ஒரு அமைதி எல்லாமே ஒன்றாகக் கலந்து இருக்கும். ஏற்கனவே வடசென்னை பட நேரத்தில் மயிலை சிவகுமாருடன் வெற்றிமாறனுக்கு பழக்கம் உள்ளது.
vetrimaaran with mayilai sivakumarஒரு dialogue ஏற்கனவே social media-வில் leak ஆனது: “மயிலைல வர்றவன் ஒருத்தன் இல்ல டா.. அரசன் வர்றான்!” அந்த ஒரு வரி போதும். STR ரசிகர்கள் இதை “அடுத்த Vetri Paathai” என்று already celebrate பண்ண ஆரம்பிச்சாச்சு.

2 months ago
4






English (US) ·