இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கம்!

8 months ago 8
ARTICLE AD BOX

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பத்தில் சிவாஜி கணேசனின் 'தங்கப்பதக்கம்' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி எழுத்தாளராக திரையுலகில் அறிமுகமாகி, 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'பூட்டாத பூட்டுகள்', 'ஜானி', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'நண்டு', 'மெட்டி', மற்றும் 'அழகிய கண்ணே' எனப் பல திரைப்படங்கள் மூலம் மனிதர்களை இயக்கியவர்.

இயக்குநர் மகேந்திரன்

இயக்குநர் எனப் பயணித்தவர் தனது கடைசி காலக்கட்டத்தில் நடிகராகவும் 'காமராஜ்', 'தெறி', `பேட்ட' ஆகிய படங்களில் வியக்க வைத்தார். தமிழ் சினிமாவின் போக்கையே, எளிய மனிதர்கள் மனங்களின் பிரமாண்டத்தைக் காட்டிய இயக்குநர் மகேந்திரன், ஏப்ரல் 2ம் தேதி 2019ஆம் ஆண்டு காலமானார்.

அவர் மரித்தாலும், அவரது படைப்புகள் என்றும் தமிழ் சினிமாவில் கோலோச்சி நிற்கும். அவரது நினைவைப் போற்றும் வகையில் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி

இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, எடிட்டர் லெனின், இயக்குநர் செல்வமணி, நடிகர் மோகன், நடிகை தேவயானி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடலாசிரியர் சினேகன், நடிகர் சின்னி ஜெயந்த்,ஆசிய தமிழ்ச் சங்கம் விசாகன், கவிஞர் முத்துலிங்கம், நடிகை குட்டி பத்மினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

`சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம்; எம்.ஜி.ஆர் `கட்றா தாலிய'னு சொன்னாரு' - இயக்குநர் மகேந்திரன்
Read Entire Article