ARTICLE AD BOX
இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான இத்திரைப்படம், தன் கணவரின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக வாழ போராடும் புதுமணப் பெண்ணின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது!
நடிகை டாப்ஸி பண்ணு நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம் தப்பாட். திருமணத்திற்கு பின்னர் மனைவியை அறையும் (அவமதிக்கும்) உரிமை ஒரு கணவருக்கு இல்லை என்பதை மூல கருவாக கொண்டு உருவான திரைப்படம்!
நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 2012-ஆம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான திரைப்படம். அறியாமை காரணமாக தனது சொந்த குடும்ப நபர்களால் அவமதிக்கப்படும் நாயகி, தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைகளை மாற்றுகிறார்? என்பதே இத்திரைப்படத்தின் கதை!
நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 36 வயதினிலே. தனது சொந்த குடும்ப நபர்களால் அவமதிக்கப்படும் நாயகி, தனது தனிப்பட்ட முயற்சியால் நாடு போற்றும் நபராக எப்படி மாறுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை!
மலையாளம் மொழியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். ஆதிக்கம் செலுத்த விரும்பும் கணவர் மற்றும் அதை எதிர்த்து போராடும் மனைவி இருவரின் கதையே இத்திரைப்படம்!
திருமணத்திற்கு பின் குறையும் காதல், காதலுக்கு ஏங்கும் மனைவி, ஏமாற்றத்தில் தவிக்கும் மனைவிக்கு ஆறுதலாய் கிடைக்கும் புதிய துணை என மாறுபட்ட ஒரு கதைகளத்துடன் கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான திரைப்படம் இந்த The Lunchbox!
நடிகை வித்யா பாலன் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம் துமாரி சூலு. இல்லத்தரசிகளின் மறுபக்கத்தை காண்பித்த திரைப்படம். நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம், இத்திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்!
கணக்கு பாடத்தில் கோட்டை விடும் மகன்; மகனை கரைசேர்க்க தனது கணவரையே எதிர்த்து நின்று போராடி, சவால்கள் பல சந்திக்கும் தாயின் கதையே இத்திரைப்படம். நடிகை நிவேதா நடிப்பில் அண்மையில் தெலுங்கு மொழியில் வெளியானது!
Thanks For Reading!







English (US) ·