ARTICLE AD BOX
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். இன்றைக்கும் பதற்றமான தென்தமிழகத்திலிருந்து தப்பித்துப் பிழைத்து ஓடி வந்து தன் இலக்கை அடைந்த நிறைய இளைஞரின் கதையாக இது உருவாகியிருக்கிறது.
Bison - Kaalamaadan Exclusive: “இது தப்பிப் பிழைத்து ஓடி வந்து தன் இலக்கை அடைந்த இளைஞர்களின் கதை!”
இதில் அமீர், பசுபதி, லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
ட்ரெய்லரில் கபடி வீராராக பலவேறு சமூக சவால்களை ஆதிக்கங்களை எதிர்கொள்கிறார் கபடி வீரான துருவ். கபடி வேண்டாம் என்று தட்டி சொல்லும் அப்பா பசுபதி, ஒரு கட்டத்தில் ஒடுக்குமுறைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பையன் கலங்கிப் போய் களமாடுவதைப் பார்த்து, 'டேய் இது பத்தாது, இது பத்தாது உன்னோட கை உடைச்சாலும், கால உடைச்சாலும் நீ ஓடிகிட்டே இரு. மேல மேல போகனும். அந்த டாப்புக்குப் போகனும், உச்சத்துக்குப் போகனும். அப்பதான் இங்க நம்ம ஒரு ஆளாவே தெரிவோம்' என வசனத்தில் துருவிற்கு பக்கபலமாக நிற்பதைப்போல ட்ரெய்லர் படபடவேன ஆக்ஷன் திரில்லரோடு முடிந்திருக்கிறது.
காளமாடன் வருகை
சதிராடும் ஊருக்குள்ள
களமாட வருகிறான்
தெக்கத்தி காளமாடன்
__________________________________
In a Land of Chaos, rises a Believer!! #BisonKaalamaadan Trailer Out Now!
▶️▶️https://t.co/1DcIBKWm0P
Kaalamaadan has crossed Half Time in his game!!
4 Days to… pic.twitter.com/GjRVn92NrQ
இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், "காளமாடன் வருகை சதிராடும் ஊருக்குள்ள களமாட வருகிறான் தெக்கத்தி காளமாடன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.

2 months ago
4






English (US) ·