உடலை ஃபிட்டாக வைத்திருக்க விளையாட்டில் ஈடுபடும் பாலிவுட் பிரபலங்கள் லிஸ்ட்!

8 months ago 8
ARTICLE AD BOX
பாலிவுட் பிரபலங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட செய்கின்றனர். அவை உடலை வலிமையாக்குவதோடு மன ஆரோக்கியத்தையும் காக்கிறது. இதில் அவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் பற்றி பார்க்கலாம்
Image 1
பாலிவுட் ரன்தீப் ஹூடாவுக்கு ஹார்ஸ் ரைடிங் மிகவும் பிடித்தமான செயலாகும். அவர் 'ஷோ ஜம்பிங்' எனும் குதிரையேற்ற போட்டியிலும், போலோ எனும் குதிரை மீது அமர்ந்து நீண்ட ஸ்டிக்கில் பந்தை அடித்து ஆடும் விளையாட்டிலும் ஈடுபட்டுள்ளார். இவற்றில் ஏராளமான விருதுகளும் வென்றுள்ளார்
Image 2
அலி ஃபசல், ஜப்பான் தற்காப்பு கலையான Jujutsu மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். மேலும், சைக்கிளிங் மற்றும் குடைப்பந்து விளையாட்டிலும் ஈடுபடுகிறார்.
Image 3
பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபாதி, குத்துச்சண்டை விளையாட்டு மூலம் உடலை வலிமையாக வைத்திருக்கிறார். மேலும், உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களை ஆன்லைனிலும் பகிரவும் செய்வார். உடல் ஆரோக்கியத்திற்காக சர்க்கரை மற்றும் இறைச்சியை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்
Image 4
நடிகை சயாமி கெர்-க்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது. சைக்கிளிங் மற்றும் நீச்சல் பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இவர் நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய போட்டிகள் அடங்கிய டிரையத்லானில் பங்கேற்ற முதல் இந்திய நடிகையாகும்.
Image 5
பாலிவுட் நடிகர் அக்ஷய் ஓபராய், MMA எனும் Mixed martial arts-ல் கைத்தேர்ந்தவர் ஆகும். பல்வேறு வகையான தற்காப்புக் கலைகளை பயிற்சி பெறுவது மட்டுமின்றி, ஹெல்தி உணவு முறையுடன் உடல் ஃபிட்னஸை பராமரிக்க செய்கிறார்
Image 6
நேஹா துபியா, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஸ்பிரிண்டிங் பயிற்சி மூலம் ஹெல்தியாக இருக்கிறார். அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறை அனைத்து பணியிலும் சுறுசுறுப்பாக செயல்பட உதவிப்புரிகிறது
Image 7
பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா, பழங்கால தற்காப்பு கலையான களரி பயிற்சியில் ஈடுபடுகிறார். அது அவரை சுறுசுறுப்பாக்குவது மட்டுமின்றி கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்துகிறது. அவை நடிப்பு மற்றும் நடன திறனுக்கும் உதவுகிறது
Image 8
ஜான் ஆபிரகாம், உடலை கச்சிதமாக வைத்திப்பதில் அதிக ஆர்வமிக்கவர். ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமின்றி கால்பந்து விளையாட்டிலும் தவறாமல் ஈடுபடுகிறார்.
Image 9
Thanks For Reading!
Read Entire Article