ARTICLE AD BOX
இந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்த ஹீரோயின்களில் ஒருவரான மீனா, தான் காதலித்த நடிகருக்கு திருமணமான நாளை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும், தன் இதயமே நின்று விட்டது போல் இருந்தது எனவும் மீனா கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்தவர் மீனா. அன்றைய கால முன்னணி நடிகர்கள் அனைவரும் மீனாவுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஏங்கினார்கள் என்ற செய்தியும் உண்டு.
அந்த அளவுக்கு ஒரு அழகுப்புயல். குறிப்பாக இவரது கண்ணழகுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தது. இதன் காரணமாகவே மீனாவை கண்ணழகி எனவும் செல்லமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் மீனா. ஆனால் அதற்கு முன்னர் ஒரு பிரபல நடிகரை உருகி உருகி காதலித்ததாக சமீபத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார் மீனா.
இந்திய சினிமாவின் ஆணழகன் நடிகராக வலம் வருபவர் ரித்திக் ரோஷன். நடிகை மீனா, ரித்திக் ரோஷன் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தாராம். எப்படியாவது தன்னுடைய காதலை கூறி ரித்திக் ரோஷனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நினைத்திருந்தாராம்.
ஆனால் எதிர்பாராத விதமாக ரித்திக் ரோஷனுக்கு திருமணம் என்ற செய்தி கேட்டு தன் இதயமே நின்று விடும் அளவுக்கு மோசமாக இருந்ததாக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். பின்னர் கெட்டுகெதர் நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தையும் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
meena-loves-hrithik-roshanஅது என்னமோ தெரியவில்லை, நம்ம ஊரு நடிகைகளுக்கு பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களையே பிடித்துப் போகிறது. நம்ம கிட்ட இல்லாதது அப்படி அவங்க கிட்ட என்ன இருக்குது என அப்போதே பல நடிகர்கள் ஏங்கினார்களாம்.

8 months ago
8






English (US) ·