"எனக்கு Video Games பிடிக்கும்; இப்ப Red Dead Redemption; அடுத்து..." - பட்டியல் போடும் பூஜா ஹெக்டே

7 months ago 8
ARTICLE AD BOX

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தில், பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாரயணின் இசையமைத்திருக்கிறார். 'RETRO' டைட்டில் டீஸர் வெளியாகி காதல், ஆக்‌ஷன் மோடில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

Retro Exclusive StillsRetro Exclusive Stills
RETRO: `ஒரு தீயில சொல்லெடுத்து...' - சூர்யாவின் ரெட்ரோ பட 'THE ONE' பாடல் ரிலீஸ்

இத்திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படக்குழு புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர்.

நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்.

அவ்வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமாக தனது கேமிங் பழக்கம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அதில், "எனக்கு கேமிங் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். நான் இப்போது 'RED DEAD REDEMPTION' விளையாடிக்கொண்டிருக்கிறேன். அதன் கதை அற்புதமாக இருக்கும். எமோஷனலான கதை, ஒரு சினிமா போன்று தரமான கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Wow. #PoojaHegde is a gamer girl.
Beauty, brains, and gaming skills @hegdepooja #Retro pic.twitter.com/rr2h5VQApU

— George (@georgeviews) April 29, 2025
Retro BTS: சூர்யா -கார்த்திக் சுப்புராஜின் `ரெட்ரோ' பட காமிக் ஸ்டோரி படங்கள் |Photo Album

அதுபோல 'FORZA HORIZON', 'NINTENDO SWITCH, ZELDA', 'MARIOKART', 'OVERCOOKED' ஆகியவையும் விளையாடுகிறேன். கூடிய விரைவில் 'RED DEAD REDEMPTION' முடித்துவிடுவேன்.

அதன் பிறகு 'GOD OF WAR', 'UNCHARTED' கேம்களை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். இதுதொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" - நாசர் பகிர்ந்த சம்பவம்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Whatsapp Channel
Read Entire Article