'என் கனவு நிஜமாகிவிட்டது'- இயக்குநராகும் கென் கருணாஸ்; தொடங்கிய படப்பிடிப்பு

2 months ago 4
ARTICLE AD BOX

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' போன்ற படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

தற்போது கென் கருணாஸ் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்காலிகமாக 'புரொடக்‌ஷன் நம்பர் 1' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.

பார்வத்தா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் கார்த்தி போன்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பூஜை புகைப்படங்களைப் பகிர்ந்து " கடவுளுக்கு நன்றி. என் கனவின் இரண்டாம் பாதி, இறுதியாக அது நிஜமாகிவிட்டது. என்னை நம்பி, எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று கென் கருணாஸ் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

BB Tamil 9: 'அவர் செய்யும் ஆக்டிவிட்டி எல்லாம் தவறா இருக்கு'- வினோத் திவாகர் வாக்குவாதம்
Read Entire Article