`என்ன இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டது நீங்கதான்; நாளைக்கு என்னோட படம் ரிலீஸ்...'- நடிகர் கவின் | Video

3 months ago 5
ARTICLE AD BOX

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

`லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவரது 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது, நடிகராக கவினுக்கு ஒரு மைல் கல்லை தந்தது.

நடிகர் கவின் : ``கிஸ் டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால்"

இந்நிலையில், கவினின் ஆறாவது படமாக உருவாகியிருக்கும் 'கிஸ்' நாளை (செப்.19) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார்.

'கிஸ்' படத்தின் வெளியீட்டையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகர் கவின், "நம்ம படம் நாளை ரிலீஸாகிறது. முழுக்க முழுக்க ஜாலியான படம் இது. ஒன்னுமே இல்லாத ஒருத்தன இவ்வளவு தூரம் கொண்டு வந்து வளர்த்துவிட்டது நீங்கள்தான்.

Kiss

நாளை முதல் :) pic.twitter.com/SytfaKRkuk

— Kavin (@Kavin_m_0431) September 18, 2025

இங்கிருந்து இன்னும் ரொம்பதூரம் கூட்டிட்டுப் போவிங்கனு நம்புறேன். எப்பவும் கூடவே இருங்க. நாளை பாருங்கள், நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்" என்று பேசியிருக்கிறார் கவின்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article