ARTICLE AD BOX

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், 'அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் நீக்கவும் இயலவில்லை. அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக இப்போது தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர், "பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்ட எனது எக்ஸ் தள கணக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சரியாகிவிட்டது. மேலும், மிகவும் அபத்தமான தலைப்புகளுடன் கூடிய கட்டுரைகளும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களுடன் என்னைப் பற்றிய 'விசித்திரமான விளம்பரங்கள்' வந்து கொண்டிருக்கின்றன. அதில் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அவை மோசடி இணைப்புகளுக்கு வழிவகுக்கலாம். அந்த விளம்பரங்கள் பற்றி எக்ஸ் தளத்துக்குப் புகார் அளியுங்கள். அவற்றை நிறுத்த எனக்கு எந்த அதி காரமும் இல்லை. என்னால் முடிந்த வரை முயற்சித்தேன். விரைவில் எக்ஸ் தளம் அந்த பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

8 months ago
8






English (US) ·