ARTICLE AD BOX
விக்ரம், எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் போன்ற நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் வீர தீர சூரன் 2. கேஸ்ங்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 24ம் தேதி வெளியானது
மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான எல் 2 எம்புரான் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
பாரதி ராஜா, நட்டி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் நிறம் மாறும் உலகில். வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தை கொண்ட தருணம் திரைப்படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
இது தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் உருவான மலையாள திரைபடமாகும். ஊருக்கு சாலை போட வரும் காண்டராக்டர் பற்றி நகரக்கூடிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று ஏப்ரல் 25ம் தேதி வெளியாகியுள்ளது
நகைச்சுவை கதையில் உருவாகியுள்ள மேட் ஸ்கொயர் திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதில் நர்னே நிதின், சங்கீத் சோபன் போன்ற தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்
இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜப்பனீஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படமாகும். புல்லட் டிரெயின் 100 கி.மீ வேகத்துக்கு கீழ் சென்றால் வெடித்துவிடும் என்ற கதைக்களத்தில் படம் செல்லக்கூடும்
சைப் அலி கான், நிகிதா தத்தா நடிப்பில் உருவான ஜூவல் தீப் எனும் இந்தி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது
Thanks For Reading!







English (US) ·