ARTICLE AD BOX

வால்மீகி முனிவரின் வாழ்க்கை கதை படமாக இருப்பதாகவும் வால்மீகியாக பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அதில் அக்‌ஷய் குமார் வால்மீகி வேடத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைக் கண்ட அக்‌ஷய்குமார் அதிர்ச்சியடைந்தார்.
அது செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி வீடியோ என்றும் அதை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்த போலி வீடியோக்களை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அக் ஷய் குமார் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆரிஃப் டாக்டர் தலைமையிலான அமர்வு, ஏ.ஐ-யால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

2 months ago
4






English (US) ·