ஒளிப்பதிவின் ஃபில்டர் யுகம்: ஒளி - உணர்ச்சி மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 03

2 months ago 4
ARTICLE AD BOX

ஒளிப்பதிவின் ஃபில்டர் யுகம் என்பது திரைப்பட ஒளிப்பதிவின் பரிணாமத்தில் மிகச் சிறப்பான மற்றும் தனித்துவமான ஒரு காலகட்டமாகும். கருப்பு - வெள்ளை திரைப் பருவம், வண்ணத் தொழில்நுட்பத்தின் அறிமுகம், டிஜிட்டல் கேமரா யுகம் இவ்வனைத்திலும் ஃபில்டர்கள், ஒளி மற்றும் நிழல் மொழியை உருவாக்கி, காட்சியின் உணர்ச்சியை வடிவமைக்கும் முக்கிய கருவியாக இருந்தன. ஒவ்வொரு ஃபில்டரும் ஒரு விஷுவல் டோன் (காட்சிக் குறியீடு) மற்றும் உணர்ச்சி தாக்கத்தை உருவாக்குகிறது.

பழைய கருப்​பு- வெள்ளை திரைப்பட நாட்​களில், குறிப்​பாக குளோஸ்​-அப் காட்​சிகளில், சாஃப்​டெக்ஸ் (Softex) ஃபில்​டர்​கள் மிக முக்​கிய​மான பங்கு வகித்​தன. அந்​தக் கால பிலிம் மீடி​யத்​துக்​கு அதிக ஒளி தேவைப் பட்​ட​தால் ஒளிப்​ப​தி​வாளர்​கள் வலு​வான விளக்​கு​களை நேரடி​யாகக் கதா​பாத்​திரங்​களில் செலுத்​தி, அதன் தீவிரத்தை மென்​மைப்​படுத்த சாப்ட் ஃபில்​டர்​களை பயன்​படுத்​தினர்.

Read Entire Article