ARTICLE AD BOX
Memes: சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தீவிரவாதிகளை பிடிக்கும் தேடுதல் வேட்டையிலும் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க பிரதமர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்து உடனே இந்தியா திரும்பி விட்டார்.

வந்த கையோடு அவர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டது தான் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை வழக்கம் போல நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதல கேள்விப்பட்டதும் ஜி உடனே இந்தியா வந்துட்டார். அப்புறம் என்ன ஆச்சு. அப்படியே தேர்தல் பிரச்சாரம் பண்ண போயிட்டார்.

ஒரு ஆக்சிடென்ட் நடந்தா கூட ஆட்சியை கலைக்கணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனா இவ்ளோ பெரிய தாக்குதல் நடந்து இருக்கு ஒரு ஆளு கூட வாய திறக்கல.

இப்படி ஒன்றிய அரசை கலாய்க்கும் விதமாக பல மீம்ஸ் பரவி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

8 months ago
8





English (US) ·