ARTICLE AD BOX
ப்ரீத்தி முகுந்தன், நெமலி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெமலி, கண்ணப்பாவின் காதலி. கண்ணப்பாவின் பயணத்துக்கு நெமலி ஆதரவாக இருக்கிறார்.
அக்ஷய் குமார் சிவன் வேடத்தில் நடிக்கிறார். சிவன், கண்ணப்பாவின் பக்தியை சோதிக்கும் கடவுள். அவருடைய தோற்றம் படத்திற்கு கம்பீரத்தை சேர்க்கிறது.
பிரபாஸ் 'ருத்ரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது சிவபெருமானின் உக்கிரமான அவதாரம். இது சிறிய cameo ரோல் தான். ஆனால், ரொம்பவும் powerful-ஆ இருக்கும் என கூறப்படுகிறது
நடிகை காஜல் அகர்வால் பார்வதி தேவியாக நடிக்கிறார். முக்கியமான காட்சிகளில், காஜல் தனது நடிப்பால் மென்மையையும், தெய்வீக அழகையும் வெளிப்படுத்துகிறார்.
மோகன்லால் "கிராதா" என்ற வேடத்தில் நடிக்கிறார். உண்மையில் அவர் மாறு வேடத்தில் இருக்கும் சிவபெருமான். படத்தில் வரும் கண்ணப்பாவின் பயணத்தில், அவரைச் சோதித்து, ஊக்கப்படுத்துகிறார்.
மோகன் பாபு படத்தில் மகாதேவ சாஸ்திரி என்ற பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மது, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பண்ணகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணப்பாவின் ஆரம்ப வாழ்க்கையில் பண்ணகா ஆதரவாக இருக்கிறார்.
முக்கேஷ் ரிஷி கம்பாடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கம்பாடு, கண்ணப்பாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த பலம் வாய்ந்த நபராகும்
Thanks For Reading!








English (US) ·