ARTICLE AD BOX
டாப்சி பன்னு, நடிப்பு மட்டுமின்றி நடன திறனுக்கும் பெயர்பெற்றவர். இவர் திரையுலகில் கால் பதிக்கும் முன்பே கதக் நடன வடிவிலும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டார்
தேசிய விருது வென்ற இந்தி நடிகையான கீர்த்தி சனோன், 8 வயதில் இருந்து கதக் நடனத்தில் பயிற்சி எடுத்து கொண்டார்
பாலிவுட் திரையுலகில் தி பெஸ்ட் டான்சராக திகழ்பவர் மாதுரி தீட்சித். இவர் 3 வயதில் இருந்து பாரம்பரிய நடனங்களில் முறைப்படி பயிற்சி எடுத்துள்ளார். இவரது கதக் நடன வடிவம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது
இந்திய நடிகை அலாயா எஃப்!, கதக் நடனத்தில் முறைப்படி பயிற்சி எடுத்துள்ளார். அவர் நடனமாடும் வீடியோவை ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் பகிர செய்வார். கதக் தவிர Contemporary நடனமும் முறைப்படி கற்றுக்கொண்டார்
ராதிகா ஆப்தே, புனேயில் மறைந்த பாரம்பரிய நடன கலைஞர் ரோகினி பேட்-விடம் சுமார் 8 ஆண்டுகள் கதக் பயிற்சி எடுத்துக்கொண்டார். பிறகு லண்டனில் contemporary டான்ஸில் ஓராண்டு பயிற்சி மேற்கொண்டார்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மறைந்த நடன கலைஞர் பிர்ஜு மகராஜிடம் கதக் நடனம் முறைப்படி கற்றுக்கொண்டார். அவரது நடனமாடும் திறனை Bajirao Mastani போன்ற திரைப்படங்களில் திறம்பட வெளிப்படுத்திருந்தார்
பிரியங்கா சோப்ரா, கதக் நடனத்தில் கைத்தேர்ந்தவர். இவர் பழம்பெரும் நடிகரும், கதக் நடனக் கலைஞருமான வீரு கிருஷ்ணனிடம் பாரம்பரிய நடனத்தில் முறைப்படி பயிற்சி எடுத்துள்ளார்
பாலிவுட் நடிகை ரிச்சா சதா, கதக் நடன வடிவில் முறைப்படி பயிற்சி எடுத்தது மட்டுமின்றி street jazz டான்ஸிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
Thanks For Reading!







English (US) ·