ARTICLE AD BOX
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.
இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபயங்கர் 'கருப்பு' படத்திற்கு இசையமைக்கிறார். தீபாவளியை முன்னிட்டு கருப்பு படத்தின் 'God Mode' பாடல் வெளியாகி சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "நல்ல வாய்ப்புகள் நிறைய கிடச்சிருக்கு. அதுக்கெல்லாம் நன்றி சொல்லதான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தேன்.
'கருப்பு' படம் நல்லபடி வந்திருக்கு. படத்தோடு 80% பணிகள் முடிஞ்சது. விரைவில் ஒரு நல்ல தேதியைப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும்.
ஆர்.ஜே பாலாஜி 'மூக்குத்தி அம்மன் -2' படத்தை சுந்தர் சி சார் இயக்குகிறார். அதே நயன்தாரா நடிக்கிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே எங்கிட்ட சொல்லிட்டுதான் ஆரம்பிச்சாங்க. எந்தப் பிரச்னையுமில்லை. அவர்களுக்கு என் வாழ்த்துகள்" என்றார்.

2 months ago
4






English (US) ·