'கருமுட்டையை' உறைய வைத்த பாலிவுட் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

9 months ago 8
ARTICLE AD BOX
கருமுட்டையை வெளியே எடுத்து, உறைய வைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் முறையை Egg Freezing என அழைக்கிறோம். ஏராளமான இந்திய பிரபலங்கள் பிற்காலத்தில் கருத்தரிக்க இந்த முறையை பின்பற்றியுள்ளனர். அவர்களது லிஸ்ட்டை இங்கு பார்க்கலாம்
Image 1
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 30 வயதை எட்டியதும் தனது கருமுட்டையை உறைய வைத்தார். அவர் சினிமா கேரியரை கருத்தில் கொண்டு, பிற்காலத்தில் கருத்தரிக்க இந்த முடிவை எடுத்தார். தொடர்ந்து 39 வயதில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றேடுத்தார்
Image 2
புகழ்பெற்ற நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான ஃபரா கான், சினிமா கேரியருக்காக தனது கருமுட்டையை உறைய வைத்தார். பிறகு 43 வயதில் IVF சிகிச்சை மூலம் மூன்று குழந்தை பெற்றேடுத்தார்
Image 3
திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், தனது 36 வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். தொடர்ந்து, 43 வயதில் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றேடுத்தார்
Image 4
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 30 வயதை எட்டிய சமயத்தில் தனது கருமுட்டையை உறைய வைத்தார். அவருக்கு விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுகொள்ள விருப்பம் இல்லையென்றும் தெரவித்தார்
Image 5
பாலிவுட் நடிகை மோனா சிங் தனது 37 வயதில் திருமணம் செய்துகொண்டார். குழந்தை பொறுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானம செய்து, 34 வயதிலேயே கருமுட்டை உறைய வைக்கும் பிராசஸில் ஈடுபட்டார்
Image 6
பாலிவுட் பிரபலம் நேஹா பெண்ட்சே, 30 வயதில் கருமுட்டையை உறைய வைத்துகொண்டார். அவர் நிதி ரீதியாக வலிமையாக இல்லாத சமயத்தில் குழந்தை பெற்றுகொள்ள விருப்பம் இல்லை என பேட்டியில் கூறியிருந்தார். இவர் 2020ல் 35 வயதில் திருமணம் செய்துகொண்டார்.
Image 7
திரைப்பட நடிகை மற்றும் டிவி டிவி தொகுப்பாளினியான மந்திரா பேடி, 30 வயதை தாண்டிய பிறகு கருமுட்டையை உறைய வைக்க முடிவு செய்தார். சினிமா கேரியர் மற்றும் இனப்பெருக்க முடிவுகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க இந்த முடிவை எடுத்தார். அவர் 39 வயதில் ஆண் குழந்தையை பெற்றேடுத்தார்
Image 8
முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான டயானா ஹைடன், 2008ல் தனது கருமுட்டையை உறைய வைத்துகொண்டார். 2016ல் உறைய வைத்த முட்டை மூலம் பெண் குழந்தை பெற்றேடுத்தார். பிறகு 2018ல் அதே முட்டை மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்
Image 9
Thanks For Reading!
Read Entire Article