ARTICLE AD BOX
பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார்.
அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சேரன், " சபேஷ் அண்ணன் இல்லை என்று நினைக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது.
1997-ல் நான் 'பாரதி கண்ணம்மா' என்று முதல் படத்தை எடுத்தேன். 27 வருடங்கள் ஆகிவிட்டன.
சபேஷ்இந்த 27 வருடத்தில் என்னுடைய எல்லா படங்களிலும் ஏதோ ஒரு இடத்தில் இருப்பார்.
அவருடன் நான் பயணம் செய்துகொண்டே இருக்கிறேன். இசை தொடர்பான எல்லா சந்தேகங்களையும் அவரிடம் தான் கேட்பேன்.
என் வாழ்க்கையில் இவரை மறக்கவே முடியாது. நல்ல மனிதர் அவர். அவருடன் பணியாற்றியபோது ஒரு சின்ன முக மாற்றத்தைக்கூட நான் பார்க்கவில்லை.
இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" - பாக்யராஜ்'தவமாய் தவமிருந்து' படத்தில் முழு இசையமைப்பாளராக பணியாற்ற வைத்தேன்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா' பாடல் அப்பாக்கள் இருக்கும் வரை ஒலிக்கும்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் சபேஷ் அண்ணன். ஆனால் எங்களுக்கு எல்லாம் கறுப்புத் தோலாக இருப்பதால் மரியாதை கிடைப்பதில்லை.
சேரன்எனக்கு அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரெல்லாம் கொண்டாடப்பட வேண்டிய நபர்.
இன்னும் நிறைய புகழை அவர் பெற்றிருந்திருக்க வேண்டும். நிறைய திறமைசாலிகள் ஒதுக்கப்படுகிறார்கள். அதில் இவரும் ஒருவர்" என பேசியிருக்கிறார்.

1 month ago
3






English (US) ·