‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தீபிகாவுக்கு பதில் ஆலியா பட்!

2 months ago 4
ARTICLE AD BOX

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்ததது. இப்படத்தின் 2-ம் பாகப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது.

எட்டு மணி நேர பணி, 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு தப்புக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் இடத்தில் வேறு யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை.

Read Entire Article