காட்சி அமைப்பு - வெளி​யின் மவுன மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 06

1 month ago 2
ARTICLE AD BOX

சினி​மா​வில் ஒரு காட்​சி, நான்கு பக்​கங்​களைக் கொண்ட ஒரு சட்​டகத்​துக்​குள் (ஃப்​ரேம்) அடைக்​கப்​படு​கிறது. இந்​தச் சட்​டகம் வெறும் ஒரு எல்லை மட்​டுமே அல்ல, மாறாக, அது ஒரு கதைச்​சொல்​லி​யின் தேர்வு மற்​றும் தத்​து​வார்த்​தப் பார்​வை. ஒரு ஒளிப்​ப​தி​வாளர், கேமரா லென்​ஸுக்​குள் பிரபஞ்​சத்​தின் ஒரு பகு​தி​யைச் சட்​டகமிடும் போது, அவர் வெளிச்​சத்தை மட்டுமல்ல, அந்த வெளிக்​குள் உள்ள உறவு​கள், அதி​காரச் சமநிலை மற்​றும் கதா​பாத்​திரங்​களின் மனவெளி ஆகிய​வற்றை வடிவ​மைக்​கிறார். இந்​தக் காட்சி அமைப்பு (கம்​போஷிஷன்) மற்​றும் சட்​டகமிடு​தல் (ஃப்​ரேமிங்) ஆகிய உத்​தி​களே சினி​மா​வின் விஷுவல் மொழி​யாக செயல்​படு​கின்​றன.

கம்​போஷிஷன்: சமநிலை, காட்சி வழி​காட்​டல்: கம்​போஷிஷன் (காட்சி அமைப்​பு) என்​பது ஒரு சட்​டகத்​துக்குள் உள்ள அனைத்​துக் கூறுகளை​யும் (கதா​பாத்​திரங்​கள் பொருட்​கள், பின்​னணி) கலைந​யத்​துடன் வைப்​பது. இது பார்​வை​யாளரின் கண்​களைக் காட்​சி​யின் மையத்தை நோக்கி இட்​டுச் செல்​லும் நுட்​ப​மான வழி​காட்​டு​தல் ஆகும்.

Read Entire Article