"காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவர்; மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது"- சேரன் இரங்கல்

2 months ago 4
ARTICLE AD BOX

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார்.

இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

சபேஷ், தேவாவின் புகைப்படம் சபேஷ், தேவா

இவர்கள் இருவரும் இணைந்து 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்', 'பொக்கிஷம்' 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் 'கோரிப்பாளையம்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர்.

இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார்.

68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சமீபத்தில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்தார்.

இவரின் மறைவிற்கு இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சபேஷ்சபேஷ்

இதுதொடர்பாக சேரன் வெளியிட்டிருக்கும் பதிவில், " தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களின் இசையமைப்பாளரில் ஒருவரும் ஆட்டோகிராஃப் உட்பட மற்ற படங்களில் ரீரெக்கார்டிங்கில் காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவருமான சபேஷ் அவர்களின் மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது .. ஏற்றுக்கொள்ள முடியா இழப்பு.. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Read Entire Article