காப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு: பின்னணி என்ன?

8 months ago 8
ARTICLE AD BOX

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘வீரா ராஜ வீரா’ பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜஹீருதீன் தாகர் இருவரும் சேர்ந்து இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் வாசிஃபுதீன் தாகர் கூறியிருந்தார்.

Read Entire Article