ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என்.அலெக்ஸ் பாண்டியன் இயக்கியுள்ள படம், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. கவுஷிக் ராம், பிரதிபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்துள்ள இப்படத்தை மிஸ்டர் டெல்டா கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவ. 7-ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் கவுஷிக் ராம் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரஸியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி நடித்தேன். இந்தப் படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்துக் காதல் கதை. அதிலும் ஒருதலைக் காதல் கதை.

1 month ago
3






English (US) ·