ARTICLE AD BOX
தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்கு முதலில் ஸ்ரேயா சரண் மற்றும் த்ரிஷாவை தான் படக்குழு அணுகியுள்ளது. இருவரும் சில காரணங்களால் நடிக்க முடியாததால், புதுமுகம் டாப்ஸி பன்னுவை படக்குழு தேர்வு செய்தது
விஜயின் துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் லீட் ரோலில் நடித்திருப்பார். அந்த ரோலுக்கு பிரியா ஆனந்த் மற்றும் சோனம் கபூரை படக்குழுவினர் அணுகினர். இருவரும் சில காரணங்களால் நிராகரிக்க காஜலை கமிட் செய்தனர்
அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருப்பார். அந்த ரோலுக்கு முதலில் பிரியா ஆனந்தை தான் படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது
முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருப்பார். அந்த ரோலுக்கு முதலில் மீனாவை தான் படக்குழு அணுகியுள்ளது. அச்சமயத்தில் அர்ஜுனுடன் Rhythm படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அதனை ரிஜெக்ட் செய்தார்
கார்த்தி நடித்த பையா படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை தான் படக்குழு முடிவு செய்தது. ஆனால், திடீரென நயன்தாரா விலகிட தமன்னாவை தேர்வு செய்தனர். நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது
ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்திற்கு சமந்தா தான் முதல் சாய்ஸ் ஆகும். அவர் பிற ஷூட்டிங் கமிட்மெண்ட் அல்லது கருத்து வேறுபாட்டால் நோ சொல்லியுள்ளார். பிறகு, எமி ஜாக்சனை படக்குழு முடிவு செய்தது
பொல்லாதவன், தனுஷ் சினிமா கேரியரில் முக்கியமான படமாகும். இப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் தான் கமிட் ஆகியிருந்தார். ஆனால், போட்டோஷூட் பிறகு காஜல் விலகிட திவ்யா ஸ்பந்தனா எனும் ரம்யாவை படக்குழு தேர்வு செய்தது
தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான கில்லியில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தானாம். ஆனால், சில காரணங்களால் ஜோ நடிக்க மறுக்க, த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Thanks For Reading!







English (US) ·