ARTICLE AD BOX
தமிழில் வைபவ், ரெடின் கிங்ஸ்லி, தீபா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பெருசு திரைப்படம், ஏப்ரல் 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது
பேமிலி அடல்ட் காமெடி படமான பெருசுக்கு தமிழ் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டிலுள்ள பெரியவர் இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனைகளை சுற்றி கதைக்களம் செல்லக்கூடும்
இந்தியில் விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான சாவா திரைப்படம், உலகளவில் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் ஏப்ரல் 11ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது
மராத்திய மன்னர் சாம்பாஜியின் கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா திரைப்படம், மகாராஷ்டிரா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தால் கான்பூரில் கலவரமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது
Charlie brooker இயக்கிய சைன்ஸ் பிக்ஷன் சீரிஸான பிளாக் மிரர் சீசன் 7 தொடர், நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகியுள்ளது. இதன் ஓடிடி ரிலீஸூக்காக ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்
விஷால் ஃப்யூரியா இயக்கத்தில் 2021ல் வெளியான ஹாரர் திரைப்படமான சோரி-க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட சோரி 2ம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் ஏப்ரல் 2ம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது
ஜிவி பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் உருவான பேன்டசி ஹாரர் திரைப்படமான கிங்ஸ்டன், ஏப்ரல் 13ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் மூலம் கமல் பிரகாஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்
மலையாளத்தில் Painkili, Pravinkoodu Shappu, Daveed ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் Court - State Vs. A Nobody எனும் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது
Thanks For Reading!







English (US) ·