ARTICLE AD BOX

ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கேஜிஎஃப்’ பாணி பில்டப்புடன் தொடங்குகிறது டீசர். “ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்’ என்று தெறிக்கிறது அந்த பில்டப்.
பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது. ‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்... இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது’ என்ற அஜித்தின் வாய்ஸும், அப்போது வருகின்ற அவரது வெவ்வேறு கேட்டப்களும் ஈர்க்கிறது. முழுக்க முழுக்க அஜித்தின் ஆக்‌ஷன்களும், எமோஷன்களும் வெளிப்படும் இந்த டீசர், ‘குட் பேட் அக்லி’ நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. அதற்கு ஏற்பவே, பீப் சொல்லுக்குப் பிறகு ‘காட்றேன்...’ என டீசரில் முடிக்கிறார் அஜித்.

9 months ago
9






English (US) ·