ARTICLE AD BOX
குட் பேட் அக்லி டீசர் மேக்கிங் விடியோ வெளியானது.
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படிக்க | தக் லைஃப் படக்குழுவின் ஹோலி வாழ்த்து! தயாரிப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்தப் படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, முதல் பாடல் வெளியீடு குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.இந்த நிலையில், முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் குட் பேட் அக்லி டீசர் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஓஜி சம்பவம் என்கிற முதல் பாடல் வருகிற மார்ச் 18 அன்று வெளியிடப்படவுள்ளது. தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook , Twitter , Instagram , Youtube , Telegram , Threads உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

9 months ago
11






English (US) ·