ARTICLE AD BOX
கேரளா மாநிலம் திருச்சூரில் 1999 அக்டோபர் 28ம் தேதி பிறந்தார் பிரியா வாரியர். இவரது தந்தை மத்திய கலால் துறை ஊழியராக பணியாற்றுகிறார். திருச்சூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிரியா, வணிகவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்
2017ல் மாடலிங்கில் கவனம் செலுத்திய பிரியா, ஏராளமான பேஷன் போட்டிகளில் பங்கேற்றார். இதுதவிர, அழகி போட்டிகளிலும் பங்கேற்க செய்துள்ளார்
குறும்படத்தில் நடித்தது மூலம் நடிப்பு மீது பிரியா வாரியருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் சில குறும்படங்களில் நடித்த அவர், தமிழில் Nee Vaanam Naan Mazhai எனும் ஆல்பம் மியூசிக்கிலும் இடம்பெற்றார்
2018ல் ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் காட்சியில் பிரியா வாரியர் கண்ணடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்ணடித்த கிளிப் இணையத்தில் ட்ரெண்டாகிட, 2018ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் எனும் பெருமையை பெற்றார்
கண்ணடித்து பேமஸான பிரியா வாரியருக்கு, மலையாளம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பட வாய்ப்புகள் வர தொடங்கியது. தமிழில் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்
பிரியா வாரியர், பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார். குறிப்பாக, மோகினியாட்டத்திற்கு பெயர்பெற்றவர். அவரது டான்ஸ் திறமையை திரைப்படங்களிலும் காண முடியும்
பிரியா வாரியருக்கு மியூசிக்கிலும் அதிக ஆர்வம் உள்ளது. 2019ல் Nee Mazhavillu Polen, 2021ல் Ladi Ladi மற்றும் 2022ல் Pennu ஆகிய பாடல்களை பாடியுள்ளார்
நண்பர்களுடன் சுற்றுலா செல்வது பிரியா வாரியருக்கு மிகவும் பிடிக்குமாம். புதிய இடங்களில் ஜாலியாக என்ஜாய் செய்யும் படங்களை சமூக வலைதளத்தில் பகிர செய்வார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 76 லட்சம் பேர் பின்தொடர செய்கின்றனர்
Thanks For Reading!







English (US) ·