ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள அனிமேஷன் படம். 'கிகி அண்ட் கொகொ'. இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, "இது இந்தியாவின் முதல் அனிமேஷன் படம். கிகி என்ற அன்பான செல்லப் பிராணிக்கும் கொகொ என்ற சிறுமிக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது.
வேறு எதையும் விட குழந்தைகளுக்குக் கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில், இந்தப் படத்தில், குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம்" என்றார். இனிகா புரொடக் ஷன்ஸ் இதைத் தயாரித்திருக்கிறது.

2 months ago
4






English (US) ·