ARTICLE AD BOX

குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியாவின் ஆர்.மதன் குமார் இணைந்து ஃபேன்ட்ஸி ரொமான்ஸ் காமெடி படத்தைத் தயாரிக்கின்றனர். இதை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம்வயது ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடிக்கிறார்.
வினோத் கிஷண், சம்யுக்தா விஸ்வநாதன், ஜோர்ன் சர்ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.

9 months ago
8






English (US) ·