ARTICLE AD BOX
Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது கூலி படம். இதில் ரஜினி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேற்று லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
அதில் நாம் எதிர்பார்க்காத பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளது தெரியவந்தது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடித்தது ஏற்கனவே உறுதியானது. இதைத்தொடர்ந்து நாகர்ஜுனா நடித்த சண்டைக் காட்சியும் வெளியே வந்தது.
இதனால் லோகேஷ் இதுபோன்று யாரும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அடுத்ததாக கூலி படத்தில் உபேந்திரா இணைந்து இருந்தார். இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மலையாள நடிகர் செளபின் சாகிர் கூலி படத்தில் நடிக்கிறார்.
கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகர்
coolieகடந்த வருடம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிஜு டேவிட் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சௌபின் சாகிர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் சௌபின் சாகிரை கூலி படத்தில் போட முக்கியமான காரணம் இருக்கிறது.
அதாவது கூலி படம் ஒரு பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் எல்லா மொழியில் உள்ள முக்கிய பிரபலங்களை இந்த படத்தில் இணைந்துள்ளார். அந்த வகையில் மலையாளத்திலிருந்து சௌபின் சாகிர் தமிழிலும் பிரபலமாகியுள்ளதால் இவரை தேர்வு செய்து இருக்கிறார்.

9 months ago
9






English (US) ·