ARTICLE AD BOX
பணத்திற்காக அடகுமுறை - சட்டத்திற்கு புரம்பான செயல்களில் ஈடுபடும் நாயகனாக அஜித், கெட்டவனுக்குள் இருக்கும் நல்லவனை காதலிக்கும் நாயகியாக ஷாலினி இருவரும் நடிக்க கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் - லைலா நடிக்க கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தீனா. இத்திரைப்படத்தில் நடிகர் அஜித், உள்ளூர் தாதாவாக நடித்து, ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
இயக்குனர் சிங்கம்புலி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், சென்னையின் மாபெரும் கேங்ஸ்டராக நடித்த தமிழ் திரைப்படம் RED. இத்திரைப்படத்தில், பிரியா கில் நாயகியாக நடித்திருந்தார்!
நடிகர் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடிக்க கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இதில் ஒரு பாத்திரம் (ஜீவா) சாதுவாகவும், மற்றொரு பாத்திரம் (குரு) கேங்ஸ்டராகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்!
நடிகர் அஜித் குமார் சர்வதேச டானாக நடித்த தமிழ் திரைப்படம் பில்லா. இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படத்தில், நடிகர் அஜித் டேவிட் பில்லாவாக நடித்திருப்பார்.
நடிகர் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடிக்க கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் அசல். ஜீவானந்தம் (தந்தை), சிவா (மகன்) என இரண்டு பாத்திரங்களும் சர்வதேச அளவு கேங்ஸ்டராக வடிவமைக்கப்பட்டு இருக்கும்!
இயக்குனர் H வினோத் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் நடிகர் சர்வதேச கொலை/கொள்ளை குழுவின் தலைவராக நடித்திருப்பார்!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித், சர்தவேச டானாக நடித்த தமிழ் திரைப்படம் Good Bad Ugly. நடிகர் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்து இந்த திரைப்படம் உருவானது!
Thanks For Reading!







English (US) ·