சினிமாவாகிறது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை கதை

9 months ago 8
ARTICLE AD BOX

அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள், தொடர்ந்து படமாகி வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கைக் கதையும் படமாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ‘அஜய் - தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சாந்தனு குப்தா எழுதிய ‘த மொங்க் ஹு பிகேம் சீஃப் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. யோகி ஆதித்யநாத்தாக ஆனந்த் ஜோஷி நடிக்கிறார். பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், பவன் மல்ஹோத்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிந்த்ரா கவுதம் இயக்குகிறார்.

யோகி ஆதித்யநாத்தின் இளமைக் காலம், அவரது ஆன்மீக மற்றும் அரசியல் பாதையை வடிவமைத்த தருணங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சாம்ராட் சினிமாட்டிக்ஸ், "அவர் எல்லாவற்றையும் துறந்தார். மக்கள் அவரை தங்களுடையவராக ஏற்றுக்கொண்டனர்" என்று குறிப்பிட்டுப் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இந்தப் படம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.

Read Entire Article