சின்னத்திரை சமந்தாவுக்கு என்ன ஆச்சு.. வேதனையுடன் வெளியிட்ட பதிவு

8 months ago 8
ARTICLE AD BOX

Pavithra Lakshmi: சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகளின் திடீர் உடல் எடை குறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் சமீபத்தில் மாநகரம் படத்தின் ஹீரோ ஸ்ரீ உடல் மெலிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதேபோல் சின்னத்திரை நடிகையான பவித்ர லக்ஷ்மி உடல் எடை குறைத்திருக்கிறார். அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரை சமந்தா என்று அழைக்கப்படும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார். அதன் பிறகு வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பவித்ர லட்சுமி உடல்நிலை குறித்து வெளியிட்ட பதிவு

pavithra-lakshmipavithra-lakshmi

ஆனால் அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் பவித்ரா திடீர் உடல் குறைவால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என பல செய்திகள் இணையத்தில் உலாவ தொடங்கியது.

இதுகுறித்து விளக்கம் கொடுத்த பவித்ரா, தான் இப்போது மோசமான உடல் பிரச்சனையில் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அதற்கான சிகிச்சை தற்போது பெற்று வருகிறேன். தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

நான் மிக விரைவில் குணம்பெற்று பழைய நிலைமைக்கு வருவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலைமையிலும் அவர் இவ்வளவு மன தைரியத்துடன் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் பவித்ராவுக்கு இவ்வாறு பிரச்சனை இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Entire Article