ARTICLE AD BOX

நடிகர் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவரது 49, 50, 51-வது படங்கள் பற்றிய அறிவிப்பு அவரது பிறந்த நாளன்று வெளியானது.
சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் ‘மன்மதன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம் அவருடன் வல்லவன், சிலம்பாட்டம், வானம், வாலு என சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், இதில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

9 months ago
9






English (US) ·