ARTICLE AD BOX
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ராட்சன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு முதலில் விக்ரமை தான் தேர்வு செய்துள்ளனர். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் ராட்சன் வாய்ப்பை விக்ரம் நிராகரித்துள்ளார்
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அமுதாவின் தந்தை ரோலுக்கு முதலில் விக்ரமை தான் இயக்குனர் மணிரத்னம் அணுகியுள்ளார். ஆனால், சில காரணங்களால் நோ சொல்ல அந்த கதாபாத்திரம் ஜே.டி சக்கரவர்த்தி கைவசம் சென்றுள்ளது
மாதவன், ஷாலினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அலைபாயுதே. இதில் Swarnamalya-ன் fiancee ரோலுக்கு விக்ரமை அணுகியுள்ளனர். ஆனால், அவர் மறுப்பு தெரிவிக்க, கார்த்திக் குமாரை முடிவு செய்துள்ளனர்
2014ம் ஆண்டு சூர்யா நடிப்பில் உருவான 24 திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தை 2010ல் விக்ரமை வைத்து எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், இயக்குனர் - தயாரிப்பாளர் - விக்ரம் இடையே கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் அச்சமயத்தில் கைவிடப்பட்டது
காக்க காக்க திரைப்படத்தில் நடிப்பதற்கு அஜித் குமார் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நோ சொல்லியுள்ளனர். இறுதியாக சூர்யாவை தேர்வு செய்திட, காக்க காக்க பிளாக்பஸ்டர் படமாக மாறியது
1995ல் அரவிந்த சாமி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பாம்பே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை விக்ரம் தவறவிட்டார். ஹீரோ ரோலுக்கான ஆடிஷனில் இயக்குனரை திருப்திப்படுத்த தவறியதால் அதில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்
ஹாலிவுட்டில் Keanu Reeves நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படத்திற்கு விக்ரம் நோ சொல்லியுள்ளார். அந்த ரோல் மிகவும் சிறியது என்பதால் நிராகரித்துவிட்டதாக விக்ரம் கூறினார். ஆசிய நாடுகளில் படத்தை மார்கெட்டிங் செய்திட இந்திய நடிகர்களுக்கு சிறிய ரோல் வழங்கப்படுவதாகவும் கூறினார்
59 வயதை எட்டியுள்ள விக்ரம், திரைப்படங்களில் இன்றும் இளம் நாயகனாக காட்சியளிக்கிறார். அவரது இளமை தோற்றத்திற்கான ரகசியத்தை கேட்டதற்கு, சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடியுங்கள் என்று கூறினார்.
Thanks For Reading!







English (US) ·