``சில நடிகர்கள் முகமூடி அணிந்து நல்ல பேரு வாங்குறாங்க; கடந்த 5 வருஷத்துல..'' - மாளவிகா மோகனன்

8 months ago 8
ARTICLE AD BOX

'Pattam Pole' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார்.

மாளவிகா மோகனன்மாளவிகா மோகனன்

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், "சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியைச் சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

மாளவிகா மோகனன்

ஏன் இந்த பாசாங்குத்தனம். ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார். 

Malavika: "ரயில் பயணத்தின்போது எனக்கு நடந்த அந்த சம்பவம்..." - நடிகை மாளவிகா மோகனன் ஓப்பன் டாக்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read Entire Article