சிவகார்த்திகேயன்: "பொறந்த ஊருக்குப் புகழைச் சேரு!'' - முதல்வர் பினராயி விஜயனைப் புகழ்ந்த SK

8 months ago 8
ARTICLE AD BOX

பினராயி பெருமா

கேரளாவின் கண்ணூரிலுள்ள பினராயி பகுதியில் அந்த ஊரின் பாரம்பர்யத்தையும் கலாசார மரபுகளையும் பிரதிபலிக்கும் வகையில் 'பினராயி பெருமா' நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இந்தாண்டுக்கான இந்த நிகழ்வு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது.

ஏப்ரல் 13 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

Actor SivakarthikeyanActor Sivakarthikeyan

முதலமைச்சருடன் மதிய உணவு

இந்த நிகழ்வில் பங்கேற்க நடிகர் சிவகார்த்திகேயன் கேரளா சென்றிருந்தார். அங்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து அவருடைய இல்லத்தில் மதிய உணவும் அருந்தியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'பினராயி பெருமா' நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். இதே நிகழ்வில் நடிகர் ஆசிஃப் அலியும் பங்கேற்றிருக்கிறார்.

முரட்டுக்காளை

சிவகார்த்திகேயன் பேசுகையில், "நான் இந்த பினராயி பெருமா நிகழ்வுக்கு வந்ததுல ரொம்பவே மகிழ்ச்சி. நான் இவ்வளவு நாட்களாக முதலமைச்சர் சாருடைய பெயர்தான் பினராயினு நினைச்சுட்டு இருந்தேன். இப்போதான் அது ஓர் ஊரினுடைய பெயர்னு தெரிஞ்சது.

'பொறந்த ஊருக்குப் பெருமை சேரு. வளர்ந்து நாட்டிற்குப் புகழைச் சேரு'னு சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின், 'முரட்டுக்காளை' படத்துல பாடல் இருக்கும்.Sivakarthikeyan:``சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனா, எனக்கு..'' - ஷாம்
Sivakarthikeyan, Asif Ali, Pinarayi VijayanSivakarthikeyan, Asif Ali, Pinarayi Vijayan

அந்த வரிகள் எவ்வாறு உண்மையாகும் என்று விஜயன் சாரை பார்த்தால் தெரிஞ்சுக்கலாம்.

விஷு பண்டிகை

ஓர் ஊர் பெயரைத் தாங்கி இன்று ஒரு ஐகானாக மாறியிருக்கார். முதல் முறையாக விஷு பண்டிகை சமயத்துல நான் கேரளாவுல இருக்கேன்.

என்னுடைய ஒவ்வொரு படத்துக்கு நீங்கள் கொடுக்கிற அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி.

அதிலும் 'அமரன்' திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

கலையையும் பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் இந்த 'பினராயி பெருமா' நிகழ்வை நடத்தியிருக்காங்க. இப்படியான விஷயம் எனக்கு ஊக்கம் கொடுக்குது.

மலையாள சினிமா

இன்று இந்தியா முழுவதும் பலரும் ரசிக்கிற சினிமா துறையாக மலையாள சினிமா (மல்லுவுட்) இருக்கு. கடந்த மாதம் நான் கமல் சார்கிட்ட பேசும்போது 'கேரளாவுல பாருங்க. அனைவருடைய நடிப்பும் அற்புதமாக இருக்கும். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்கிற விஷயத்தையெல்லாம் தாண்டி அனைவரின் நடிப்பும் நல்லா இருக்கும்'னு சொன்னார்.

Sivakarthikeyan with Pinarayi vijayanSivakarthikeyan with Pinarayi vijayan

குடும்பத்துல ஒருத்தனாக...

இன்று மதியம் விஜயன் சார் வீட்டுல ரொம்பவே சுவையான உணவைச் சாப்பிட்டேன். அவர் வீட்டுல லன்ச்னு சொன்னதும் நம்ம தனியாக உட்கார்ந்து சாப்பிடுவோம்னு நினைச்சேன்.

ஆனால், அவரோட உட்கார்ந்து அவருடைய குடும்பத்துல ஒருத்தனாக இருந்து இன்று சாப்பிட்டேன்" எனப் பேசியிருக்கிறார்.

L2: Empuraan: "Lucifer 3-ல சிவகார்த்திகேயன் கூட ஒர்க் பண்ணலாம்" - Mohanlal, Prithviraj Pressmeet

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article