ARTICLE AD BOX
இயக்குநராக களமிறங்குகிறார் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா சூர்யா.
சினிமாவில் இயங்கி வரும் லைட்வுமன்கள் குறித்து தியா சூர்யா `லீடிங் லைட்' என்ற தலைப்பில் ஒரு டாக்கு டிராமா குறும்படத்தை எடுத்திருக்கிறார்.
Diya Suriya's Docu Dramaபாலிவுட்டில் பணிபுரிந்து வரும் லைட்வுமன்களிடம் பேட்டி கண்டு இந்த குறும்படத்தை அவர் எடுத்திருக்கிறார்.
லைட்வுமன்களாக அவர்கள் பணியாற்றிய அனுபவத்தையும், அவர்கள் சந்திக்கும் விஷயங்களையும் விவரிக்கும் குறும்படமாக இதை எடுத்திருக்கிறார் தியா சூர்யா.
இந்தக் குறும்படம் ஒளி தரும் கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அவர்களின் வலிமையைப் பற்றிப் பேசுகிறது.
இந்தக் குறும்படத்தை சூர்யா - ஜோதிகாவே தங்களுடைய 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்கள்.
உலகமெங்கும் பாராட்டுகளை அள்ளி வரும் தியாவின் இந்தக் குறும்படம் ஆஸ்கர் தகுதிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி திரையரங்கில் திரையிடப்படுகிறது.
Diya Suriyaசெப்டம்பர் 6-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்கு இந்தக் குறும்படம் திரையிடப்படவுள்ளது.
இயக்குநராக அவதரிக்கும் முதல் திரைப்படத்திலேயே பல முக்கியமான மேடைகளுக்குச் செல்லும் தியாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
Diya Suriya: `இந்த அழகான பயணத்தில்...' லைட் வுமன்கள் பற்றிய ஆவணப்படம்; தந்தை - தாயிடம் பாராட்டு
3 months ago
4






English (US) ·