ARTICLE AD BOX
இந்திய சினிமா நட்சத்திரங்களில் தனித்தீவு வைத்திருக்கும் ஒரே நடிகையாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் திகழ்கிறார். இவர் 15 ஆண்டுகளாக சினிமா துறையில் பயணித்து வருகிறார்
ஜாக்குலின் பெர்னாண்டஸ், பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மஹானாவில் பிறந்தார். இவரது பூர்வீகம் இலங்கை ஆகும். இவர் ஆஸ்திரேலியாவில் Mass Communication பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார்
கல்லூரி படிப்பை தொடர்ந்து இலங்கையில் தொலைக்காட்சி சேனலில் பணியாற்ற தொடங்கினார். அதேநேரம், ஆக்டிங் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். ரிப்போட்டராக பணியாற்றி வந்த சமயத்தில், ஜாக்குலின் கவனம் மாடலிங் பக்கம் திரும்பியது
2006ல் இலங்கை நாட்டின் அழகி பட்டத்தை வென்றதை தொடர்ந்து, மாடலிங்கில் ஏராளமான ஆஃபர்கள் ஜாக்குலினுக்கு வர தொடங்கியது
2009ல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 2011ல் வெளியான மர்டர் 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, ஹவுஸ்ஃபுல் 2, ரெய்டு போன்ற பல வெற்றி படங்கள் ஜாக்குலின் பெயரை பாலிவுட் சினிமாவில் பிரபலமாக்கியது
2012ல் இலங்கையின் தெற்கு கடற்கரையில் 4 ஏக்கர் பரப்பளவில் தனித் தீவை வாங்கினார். அப்போது அதன் இந்திய மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.
மும்பை Pali Hill பகுதியில் ஆடம்பர பங்களாவை சொந்தமாக வைத்துள்ளார். இதுதவிர, ரூ.2.11 கோடி மதிப்பில் ரேஞ்ச் ரோவர் வோக், ஹம்மர் H2,பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜீப் காம்பஸ் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மொத்த சொத்து மதிப்பு ரூ.101 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அவர் மாதத்திற்கு ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுகிறார்
Thanks For Reading!







English (US) ·