ARTICLE AD BOX
பாலிவுட் நடிகர் ஆமிர் கான், அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் அறிவுறுத்தல் பேரில், சைவ உணவு முறைக்கு மாறினார். இறைச்சியால் என்ன மாதிரியான உடல் பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை எடுத்துரைத்ததால், அசைவ உணவை கைவிட்டார்
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 2015ல் சைவ உணவு முறைக்கு மாறினார். இந்த முடிவுக்கு அவர் விலங்குகள் மீது வைத்திருக்கும் அன்பும் முக்கிய காரணமாகும்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பல ஆண்டுகளுக்கு முன்பு அசைவத்தில் இருந்து சைவ உணவு முறைக்கு மாறினார். அவரது முடிவுக்கு சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் விலங்குகள் மீது வைத்திருக்கும் பாசம் ஆகியவை முதன்மை காரணமாகும்
பாலிவுட் நடிகை ஆலியா பட், 2015ம் ஆண்டு முதல் சைவ உணவு முறையை பின்பற்றி வருகிறார். இந்த மாற்றம் அவரை ஆகடிவ்வாக வைத்திருப்பதாக கூறினார். ஆலியா பட், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக், சைவ உணவு முறைக்கு மாறியுள்ளார். அவர் உடல் ஆரோக்கியம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இம்முடிவை எடுத்தார்
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், Life Is Fair எனும் புத்தகத்தை படித்தப்பிறகு சைவ உணவு முறைக்கு மாறினார். அந்த புத்தகத்தை அவரது தந்தை பரிசாக அளித்துள்ளார்
2017ம் ஆண்டு சைவ உணவு முறைக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூர் மாறினார். மேலும், அவருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்ததால், தினசரி உணவு முறையில் இருந்து பால் பொருட்களையும் நீக்கினார்
பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர், சைவ உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் லாக்டவுடன் காலத்தில் தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறினார்.
Thanks For Reading!







English (US) ·