ARTICLE AD BOX
பெண்களுக்கான பிரத்தியேகமான / சௌகரியமான ஆடைகளை வடிவமைக்கும் Nush, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நிறுவனம் ஆகும். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த பிராண்டை அவர் தொடங்கினார்!
பெண்களுக்கான நவநாகரீக ஆடைகளை பட்ஜெட் விலையில் தயாரித்து வரும் நிறுவனம் Just F. இந்நிறுவனத்தை பிரபல பாலிவுட் நடிகை Jacqueline Fernandez, கடந்த 2018-ஆம் ஆண்டு துவங்கினார்.
உடற்பயிற்சி சார் ஆடைகள், காலணிகள் மற்றும் பிற உபகரணங்களை தயாரித்து வரும் நிறுவனம் Prowl. இந்நிறுவனம் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர், டைகர் ஷெராப் அவர்களின் நிறுவனம் ஆகும்!
கலாச்சாரம் சார்ந்த பட்ஜெட் விலை ஆடைகளை தயாரித்து வரும் நிறுவனம் Being Human. இந்நிறுவனம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவர்களின் நிறுவனம் ஆகும்!
ஆண் - பெண் என இருபாலினத்தவருக்கும் ஏற்ற நவநாகரீக ஆடைகள், காலணிகளை தயாரித்து வரும் நிறுவனம் HRX. பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், இந்நிறுவனத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கினார்!
ஆண்களுக்கான நவநாகரீக ஆடைகளை தயாரித்து வரும் ஆடை தயாரிப்பு நிறுவனம் Skult. இந்நிறுவனத்தை பிரபல பாலிவுட் நடிகர் சாகித் கபூர், Abof நிறுவனத்துடன் இணைந்து தொடங்கினார்!
ஆண்களுக்கான பாரம்பரிய (ஆடம்பர) ஆடைகளை தயாரித்து வரும் நிறுவனம் The House of Pataudi. பிரபல பாலிவுட் பிரபலன் சாயிப் அலி கான், கடந்த 2018-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கினார்.
பெண்களுக்கான இரவு நேர உடைகள் மற்றும் ஓய்வு நேர உடைகளை பட்ஜெட் விலையில் தயாரித்து வரும் நிறுவனம் Dreamss. இந்நிறுவம் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவர்களின் நிறுவனம் ஆகும்!
Thanks For Reading!







English (US) ·