ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல்

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த நிலையில் இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article