ஜி.வி பிரகாஷ் பட நாயகி 'திவ்ய பாரதி' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

10 months ago 9
ARTICLE AD BOX
பேச்சிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை திவ்ய பாரதி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஏராளமான விளம்பரங்களிலும் மாடலாக பணியாற்றியுள்ளார். இவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image 1
கோயம்புத்தூரில் 1992 ஜனவரி 28ம் தேதி பிறந்தார் திவ்ய பாரதி. கோவையில் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், ஈரோட்டில் உள்ள பிரபல கல்லூரியில் B.Tech பட்டப்படிப்பை முடித்துள்ளார்
Image 2
கல்லூரி படிப்பை முடித்தப்பிறகு பேஷன் ஷோக்களில் மாடலாக ஈடுபட்டு வந்தார். இதுதவிர, விளம்பர படங்கள், மாடலிங் போட்டோஷூட் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பணியாற்றி வந்தார்
Image 3
மாடலிங்கில் கலக்கிய திவ்ய பாரதி, 2015ல் Miss Ethnic Face of Madras பட்டத்தை வென்றார். தொடர்ந்து, 2016ல் Princess of Coimbatore பட்டத்தையும் வென்று அசத்தினார்
Image 4
2017ல் வெளியான Mupparimanam திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக திவ்ய பாரதி நடித்திருப்பார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தும் நோக்கில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்
Image 5
2019ல் ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 2 ஆண்டுகள் பட வேலைகள் சென்ற நிலையில், 2021ல் தியேட்டரில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
Image 6
பேச்சிலரை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதேநேரம், கோட் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்
Image 7
திவ்ய பாரதிக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்குமாம். அவர் Zen என்று பெயரிட்ட பூனை ஒன்றையும் வீட்டில் வளர்க்க செய்கிறார்
Image 8
திவ்ய பாரதி சோசியல் மீடியாவில செம ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அவரது இன்ஸ்டா பக்கத்தை 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர். அடிக்கடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ள செய்வார்
Image 9
Thanks For Reading!
Read Entire Article