ஜீ தமிழில் புதிய மெகா தொடர் ‘திருமாங்கல்யம்’ - நவ. 3 முதல் ஒளிபரப்பாகிறது

2 months ago 4
ARTICLE AD BOX

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர், 'திருமாங்கல்யம்'. ஒருகிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த கிராமத்துக்கே அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் அவளது சித்தி, அவளை அவமானப்படுத்தி குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அவளால் தான் தனது குடும்பத்துக்கே அதிர்ஷ்டம் என தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

கதையின் நாயகியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மேக்ஹா நடிக்கிறார். நாயகனாக திரு என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். மேலும் திருவின் காதலியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் காயத்திரி ஸ்ரீ நடிக்கிறார்.

Read Entire Article