ARTICLE AD BOX
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் நடிக்க 2 பாகங்களாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் மட்டும் ~489கோடி வசூலித்தது!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ~345 கோடி வசூலித்தது. ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த 2-வது திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது!
நடிகர் ஜெயம் ரவி, தனி நாயகனாக நடித்து வெளியாகி 100 கோடி கடந்த தமிழ் திரைப்படம் தனி ஒருவன். 20 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் ~105 கோடி வசூலித்தது.
நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடம் ஏற்று நடித்த மாஸ் ஹிட் ஆக்ஷன் திரைப்படம் ஆதி பகவான். சுமார் 25 கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் ~84 கோடி வசூலித்தது.
இயக்குனர் ராஜா மோகன் இயக்கத்தில் நடிகர் ரவி மற்றும் தமன்னா நடிக்க கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் - நகைச்சுவை திரைப்படம் தில்லாலங்கடி. 20 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் ~63 கோடி வரையில் வசூலித்தது!
நடிகர் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான Sci-fi - Zombie திரைப்படம் மிருதன். 18 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் சுமார் 49 கோடி வசூலித்தது.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு முன் வட சென்னையின் குத்துச்சண்டை கலவரங்கள் பற்றி திரையில் காண்பித்த திரைப்படம் பூலோகம். 20 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 35 கோடி வரையில் வசூலித்தது.
நடிகர் ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான காதல் - நகைச்சுவை திரைப்படம் ரோமியோ ஜூலியட். 15 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் ~32 வரையில் வசூலித்தது!
Thanks For Reading!







English (US) ·