டியூட்: ``இங்க ஒரு பெரியவர் இருந்திருக்கார் அவர் வழியிலதான்'' - பெரியார் பற்றி பேசிய இயக்குநர்

2 months ago 4
ARTICLE AD BOX

அக்டோபர் 17ம் தேதி வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ (Dude) திரைப்படம் 95 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. இதன் வெற்றிவிழா இன்று நடைபெற்றது.

பிரதீப்புடன் சரத்குமார், ரோஹிணி, மமிதா பைஜு மற்றும் பிற நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். மேடையில் பேசிய அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன், படத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போது பெரியாரைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

பெரியார்பெரியார்

அவர் பேசியதாவது:
"இன்னைக்கு வரைக்கும் 95 கோடி வசூல் ஆகியிருக்கிறது. ஆனால் இது முடிவு இல்லை. இன்னும் தியேட்டர்களில் ஓடித்து தான் இருக்கிறது. நாளைக்கு 100 அடிக்கும், அதுக்கு மேலயும் அது போகும்.

என்னோட முதல்படம் இவ்வளவு சிறப்பா அமைச்சு கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்த படம் பற்றி நிறைய விவாதங்கள் உருவாகியிருக்கு. இதுவரை பேசாத விஷயம் சொல்லி இருக்காங்க... அப்படின்னு.

DUDE DUDE

இது தமிழ்நாடு, இந்த ஸ்டேட்ல நிறைய பெரியவங்க இருந்திருக்காங்க. அந்த பெரியவரும் இருந்திருக்கார். அவங்க வழியிலதான் நாங்கல்லாம் பேசிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் இதைப் பேசுவது புதிது இல்லை, இதற்கு முன்னும் பேசியிருக்காங்க. நாங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லுவோம்.

இதை எவ்வளவு பொழுதுபோக்கா, சினிமா மொழியில, பார்வையாளர்களுக்கு ஏத்துக்கிற மாதிரி, பெரிய ஸ்கேல்ல சொல்ல முடியுமோ அப்படி சொல்ல முயற்சி பண்ணிட்டு இருப்பேன்." எனப் பேசியுள்ளார்.

``ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' - 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!
Read Entire Article